சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட பெண் நீதிபதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
மங்கெலி மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்த காந்தா மார்டின் என்பவர், தனது பணியாளர்களை வீட்டை விட்டுப் போகுமாறு கூறியுள்ளார். பின்னர் சமையல்காரர் பார்த்தபோது காந்தா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் கணவரை இழந்த அவர், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாகக் கூறப்படுகிறது. ஆனால் காந்தா தூக்கில் தொங்கிய போது அவரின் வீட்டுக் கதவு வெளிப்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.