தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் வீட்டினைக் கட்டி எழுப்புவதற்கான காசோலை வழங்கிவைக்கப்பட்டதுடன்,அடிக்கல்லும் நாட்டி வைக்கப்பட்டது. வீட்டிற்கான அடிக்கல்லை யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் தந்தையாரும்,செயலாளருமான சதாசிவம் இராமநாதன் நாட்டி வைத்திருந்தார்.குறித்த நிகழ்வில் தென்மராட்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.