அடுத்த 4 முதல் 6 ஆண்டுகளுக்குள் மனிதனை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம் சாத்தியமாகலாம் என, ஸ்பேஸ் எக்ஸின் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பங்கேற்றார். அப்போது பேசிய எலான் மஸ்க், சுற்றுவட்டப்பாதை அடிப்படையில் புவியும், செவ்வாய் கிரகமும் 26 மாதங்களுக்கு ஒருமுறை ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன என குறிப்பிட்டார்.
அதனை கருத்தில் கொண்டு அடுத்த 2 ஆண்டுகளில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஆளில்லா விண்கலம் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் என்றார்.