2020-ம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இன்று நிகழவுள்ளது.
சூரியன் மற்றும் பூமிக்கு இடையே நிலவு சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சூரியக் கிரகணம் ஏற்படுகிறது. அப்போது நிலவின் நிழல் புவியின் ஒருசில பகுதிகளில் மட்டுமே விழுவதால் மற்ற இடங்களில் அதைக் காண இயலாமல் போகிறது.
இலங்கை நேரப்படி இன்று இரவு 7.03 மணி முதல் இரவு 12.22 மணிவரை முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இரவில் நிகழ்வதால் இந்த சூரிய கிரகணம் இலங்கையில் தெரியாது.
தென் அமெரிக்கா, சிலி, அர்ஜென்டைனா,தென்மேற்கு ஆப்ரிக்கா, அண்டார்டிகாவில் இந்த சூரிய கிரகணம் முழுமையாக தெரியும்.