ஓ.டி.டி எனப்படும் இணையவழித் திரைப்படங்கள், சீரியல்களில் நடித்தவர்களுக்கு நேற்று மும்பையில் பிலிம்பேர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நவாசுதீன் சித்திக் பெற்றுக் கொண்டார். அவர் நடித்த ராத் அகேலி ஹே என்ற தொடர் சிறந்த திரைப்படத்துக்குரிய விருதைப் பெற்றது.
சிறந்த நடிகைக்கான விருது திரிப்தி டிம்ரிக்கு நடிகர் கபீர் பேடி வழங்கினார்.நடிகைகள் பிரியாமணி, திவ்யா தத்தா உள்ளிட்டோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் ரன்வீர்சிங் ,ஆலியா பட், மாதுரி தீக்சித், ஆயுஷ்மன் குரானா உள்பட ஏராளமான பாலிவுட் நட்சததிரங்கள் கண்கவரும் ஆடைகளுடன் திரளாகக் கலந்துக் கொண்டனர்.