கிறீஸ்தவர்கள் ஜெருசலேம் புனித யாத்திரை செல்வதற்காக உதவித் தொகை 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 37 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை நந்தம்பாக்கத்தில், அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்மஸ் விழாவில் பேசிய முதலமைச்சர், கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு என்றும் அதிமுக எப்போதும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் என்றும் எனவே அவர்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.