நாசாவின் ஹபுல் டெலெஸ்கோப் விண்வெளியில் இருந்து பல கோள்கள், எரிகற்கள், எரிநட்சத்திரங்கள் ஆகியவற்றின் படங்களை பூமிக்கு அனுப்புகின்றது.
அவ்வாறு அனுப்பப்படும் அநேகமான கோள்கள், விண்கற்கள் பாறைகளால் ஆனதாகவே இருக்கின்றன ஒரு சிலவற்றில் சிறிய உலோக துகல்கள் இருந்தாலும் அவற்றின் மூலம் எந்த பயனும் அடைய முடியாது.
ஆனால் தற்பேர் ஹபுல் டெலெஸ்கோப் மூலம் முழுக்க முழுக்க உலோகத்தால் ஆன விண்கல் ஒன்றினை கண்டறிந்துள்ளனர். இது பாறைகள் இல்லாமல் இரும்பு மற்றும் நிக்கல் கலவைகளால் ஆனது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் பண மதிப்பானது தற்போது பூமியின் ஒட்டுமொத்த பொருளாதாரமான 150 டிரில்லியன் டாலர்களை விட 70,000 மடங்கு அதிகம் பெறுமதியானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதில் இருக்கும் இரும்பு தாதுகளை எடுத்தால் அடுத்த பல ஆயிரம் ஆண்டுகளுக்கு பூமியில் இருந்து இருந்து தோண்டி எடுக்க அவசியமே ஏற்படதாம்.
“சிக்கெ” என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல் பூமியிலிருந்து 230 மில்லியன் கிலோமீட்டருக்கு அப்பால் சனி மற்றும் வியாழனுக்கு நடுவே விண்கற்கள் கூட்டத்திடையே சுற்றி வந்து கொண்டுள்ளதாம். இந்த விண்கல்லை ஆராய சிக்கெ விண்கலம் ஒன்றை ஏவி ஆய்வுகள் மேற்கொள்ளவும் நாசா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.