இந்தியாவில், தமிழக அரசு திரையரங்கில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதித்திருப்பது விதி மீறல் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சின் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதி உள்ளது.
கொரோனா தடுப்புக்கான மத்திய அரசின் வழிகாட்டு விதிகளுக்கு ஏற்ப புதிய உத்தரவை பிறப்பிக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசு கோரியுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட கொரோனா உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என கூறி உள்ளார்.